கோயிலில் உள்ள அம்மனுக்கு என்னதான் பட்டுப்புடவை கட்டி மலர் மாலையெல்லாம் சூட்டினாலும், தாலி, தோடு,மூக்குத்தி, வளையல், ஒட்டியானம், மோதிரம் ஆக...
Blogger news
Home »
ஞாயிறு, 18 மார்ச், 2012
யாழ்மண்ணில்முதன் முறையாக குறும்பட ,திரைப்படத்தயாரிப்பாளர்களுக்கு களம்அமைக்கின்றது.... " MAYA DOT VFX" நிறுவனம்... சர்வதேச அளவில் தொழில்நுட்பத்துறையில் சாதனை படைத்து வரும் 3D Animation and Visual Effects துறையானது யாழ் மண்ணிலும் முதன் முறையாக " MAYA DOT VFX " நிறுவனத்தினுடாக தடம் பதித்திருக்கின்றது.
இந்நிறுவனமே யாழ் மண்ணில் முதன் முறையாக நிறுவப்பட்ட 3D Animation (MAYA)and Visual Effects நிறுவனம் என்பதுடன் Multi Media ஆநனயை துறைக்குரிய தனித்துவமான நிறுவனமும் ஆகும். இந்நிறுவனம் ஏற்கனவே தனது செயற்பாட்டினை ஆரம்பித்திருந்தது. இருப்பினும் சம்பிரதாபூர்வமாக 11.03.2012 அன்று நிறுவனத் தலைவர் திரு.தங்கவேல் சிவநேசன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறிப்பாக இந்நிறுவனம் Maya மென்பொருள் பற்றிய கல்வி செயற்பாட்டினையும் தொழில்நுட்ப பயிற்சிகளையும் அளித்து வருவதோடு மட்டுமல்லாது CG Works, 3D Animation Works என்பவற்றுடன் குறும்படங்கள், ஆவணப்படங்கள்,விளம்பரங்கள்(Short films, Documentary Films and Advertisements Making & Editing)) போன்றவற்றை தாயாரிப்பதுடன் படத்தொகுப்பினையும் திறம்பட மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனமானது யாழ் மண்ணில் உள்ள குறும்பட, ஆவணப்பட, விளம்பர பட, பாடல் தொகுப்புத் தாயாரிபாளகள், இயக்குனர்களிற்கு புதுப் புது பரிணாமங்களில் தங்களது படைப்புக்களை உருவாக்குவதற்கும் அதனை மெருகூட்டுவதற்கும் துல்லியமான output, பெற்றுக்கொள்வதற்கும் ஏதுவாக அமைந்திருப்பதோடு மட்டுமல்லாது எதிர்வரும் காலங்களில் சர்வதேச சந்தையில் கணினித் தொழில்நுட்பத் தொழில்துறையில் தமக்கென தனியானதொரு தனித்துவத்தினை உருவாக்குவதற்கு அடிப்படையாகவும் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது....
Comments[ 0 ]
கருத்துரையிடுக