
இலங்கை அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் தனி நபர்களின் சொத்துக்களை பாதுகாப்பு அமைச்சு தடை செய்திருக்கிறது.
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான வர்த்தமானி அறிவித்தலை கடந்த 22ம் திகதி வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பின் பிரகாரம், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சொத்துக்கள் மற்றும் வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் உள்ள சொத்துக்களையும், தடை விதிக்கப்பட்ட அமைப்புகளும் தனிநபர்களும் உரிமை கோர முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவிப்பு இலங்கை மத்திய வங்கிக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், குறித்த சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் என்று கூறப்படுகிறது
Comments[ 0 ]
கருத்துரையிடுக