
ரஜினியின் நடிப்பில் வெளிவந்திருக்கும் கோச்சடையான் திரைப்படம் ஓரளவிற்கு அனைவராலும் பாரட்டபட்டுகொண்டிருக்கும் வேளையில் நடிகர் சிம்பு படம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
படம் குறித்து அவர் கூறுகையில், இந்த படம் எந்த ஹாலிவுட் படத்துடனும் ஒப்பிட முடியாது அந்த அளவிற்கு படத்தின் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் வேலைகள் மொக்கையாக இருக்கிறது என்றும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் மற்றும் ஏ ஆர் ரகுமான் சிறப்பான பணியினை செய்துள்ளனர். அது தவிர படத்தில் சொல்லும்படியாக ஒன்றும் இல்லை என கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நடிகர் சிம்புவின் இந்த கருத்திற்கு படத்தின் இயக்குனர் சௌந்தர்யா தனது வலைதளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். நேற்று இந்த படத்தினை பார்த்த நடிகர் கமல் சௌந்தர்யாவை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சிம்புவின் இந்த பதிலுக்கு ஐஸ்வர்யா தனுஷ் கோபமடைந்துள்ளார். ஐஸ்வர்யா மேல் உள்ள பகையால் தான் சிம்பு இப்படி கூறியுள்ளதாக அவருடைய நெருங்கிய நண்பர்கள் கூறியுள்ளனர்.
Comments[ 0 ]
கருத்துரையிடுக