
தனது அடுத்தப் படத்தில் விஜய சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளார் தனுஷ்.
நடிகர் தனுஷ் -சிவகார்த்திகேயன் நட்பு அனைவரும் அறிந்ததே. 3 படத்தின் மூலம் விஜய் டீவியில் காம்பயரிங்கில் கலக்கிவந்த சிவகர்த்திகேயனை திரையுலகிற்கு அழைத்துவந்தவ்ர் தனுஷ். தொடர்ந்து எதிர் நீச்சல் என்ற படத்திலும் அவரை நாயகனாக உயர்த்தினார் தனுஷ். அந்த படத்தின் வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயன் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றது. சிவா என் தம்பி என்று அனைவரிடமும் சொல்லிவந்த தனுஷ் தற்போது டாணா என்ற படத்தையும் தயாரித்து வருகிறார்.
தற்போது சிவாவுக்கு தொழில்முறை போட்டியாக இருந்து வருபவர் விஜய சேதுபதி. இருவரும் நட்பு பாராட்டினாலும் உள்ளுக்குள் பலத்த போட்டிகள் உண்டாம். சமீபத்தில்கூட தன்னிடம் வரும் கதைகளை எக்காரணம் கொண்டும் சிவகார்த்திகேயனுக்கு செல்லக்கூடாது என்று செயல்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது.
சிவகார்த்திகேயனுடன் தொழில்முறை போட்டியில் இருந்த விஜய சேதுபதிக்கு தனுஷ் தனது அடுத்த படத்தை கொடுத்துள்ளார்.ஆம் தனுஷ் தயாரிப்பில் விஜயசேதுபதி நடிக்கிறார்.மேலும் நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறதாம். இயக்குனர் முடிவாகவில்லையாம். கிருத்திகா உதயநிதி பெயர் அடிபடுவதாக தகவல் தெரிகிறது.
தனுஷின் இந்த முடிவு சிவாவிற்கு எரிச்சலை ஏற்படுத்துகிறதோ இல்லையோ அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் எரிச்சலை ஏற்படுத்தும் என்பது உண்மை.
Comments[ 0 ]
கருத்துரையிடுக