பார்லிமென்ட் காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின் எம்.பி.,க்கள் மத்தியில்பேசிய சோனியா,மக்களின் கோபத்தை புரிந்து கொள்ள தவறியதால் தான் கட்சிக்கு தோல்வி கிடைத்ததாக கூறினார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்தது. அக்கட்சி வெறும் 44 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று, லோக்சபாவில் எதிர்க்கட்சியாகும் வாய்ப்பை இழந்தது.எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற 55 உறுப்பினர்கள் தேவை.
பார்லிமென்ட் காங்.. தலைவர் சோனியா
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்கள் மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா, பார்லிமென்ட் காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.சோனியாவின் பெயரை, மல்லிகார்ஜூன கார்கே முன்மொழிந்ததாகவும், மோஷினா கித்வாய் உள்ளிட்டதலைவர்கள் வழிமெழிந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னர் எம்.பி.,க்களிடையே பேசிய சோனியா,நடந்து முடிந்த தேர்தல் கடுமையான சவால் நிறைந்தது. கட்சிக்காக லட்ச கணக்கான தொண்டர்கள் கடந்தசில மாதங்களாக கடுமையாக உழைத்தனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தேர்தல் முடிவுகள் கடும் வேதனையை தருகிறது. இருப்பினும், தோல்வி குறித்து தனியாகவும், குழுவாகவும் ஆலோசனை செய்யப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த தீவிரமாக முயற்சி செய்வேன் என கூறினார்.
நம் மீது மக்கள் ஏன் கோபம்
எம்.பி.,க்கள் மத்தியில் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயல்பட்டு, முக்கிய விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்புவோம். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு போராடுவோம். லோக்சபாவில் எதிர்க்கட்சியாக அமர்வதால் நிறைய கேள்விகள் கேட்க முடியும். நிறைய விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப முடியும். நிறைய விவாதங்களில் பங்கு பெற முடியும். காங்கிரஸ் கட்சிதேர்தலில் தோல்வியடைந்துள்ளது. இருப்பினும், இந்த தோல்வி முதல்முறையல்ல. கடந்தஆண்டுகளில் தோல்வியடைந்து பின் மீண்டு வந்துள்ளோம். மக்களின் எண்ணங்களை நாம் புரிந்து கொள்ள தவறிவிட்டோம். மக்கள்நம் மீதிருந்த கோபத்தை உணர தவறியதால் தோல்வி கிடைத்தது. மக்கள் நம் மீது ஏன் கோபம் கொண்டனர் என்பது பற்றி ஆராய வேண்டும். இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
வளர்சியை விரும்பும் மற்றும் மதவாதத்திற்கு எதிரான சக்திகள் பார்லிமென்டில்ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என கூறிய சோனியா,கடந்த 10 ஆண்டுகளில்பொறுப்பான, தன்னடக்கமானமற்றும் விவேகமான தலைவராக இருந்து நாட்டை மன்மோகன் சிங், சிறப்பாக ஆட்சி செய்ததாக கூறினார்.
இதனிடையே, லோக்சபா காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங் மற்றும் வீரப்ப மொய்லி வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அப்பதவியை ஏற்க ராகுல் தயக்கம் காட்டி வருகின்றார். இதனையடுத்து லோக்சபா காங்கிரஸ் கட்சி தலைவராக, கமல்நாத் நியமிக்கப்படலாம் எனவும், ராஜ்யசபா காங்கிரஸ் கட்சி தலைவராக அந்தோணி அல்லது குலாம் நபி ஆசாத் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.இருப்பினும், இது தொடர்பாக இறுதி முடிவை காங்கிரஸ் தலைவர் சோனியா தான் எடுப்பார் என கூறப்படுகிறது.
Comments[ 0 ]
கருத்துரையிடுக