இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் அமைக்கப்படவுள்ள விசாரணைக் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.
சமதானத்துக்கான நோபல் பரிசு வென்றவர் கோபி அனான். இலங்கையில் நல்லிணக்கத்தையும் அமைதியையும் உருவாக்கும் நோக்குடனேயே போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப் பட வேண்டும் என்று ஐ.நா. தீர் மானம் வலியுறுத்துவதால் கோபி அனானே அந்தக் குழுவின் தலைவராக இருப்பதற்குச் சிறந்தவர் என்று தற்போதைய மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை ஆலோசிக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.
''கோபி அனானைத் தலைவராக நியமிப்பதில் பல அனுகூலங்கள் இருப்பதாக நவிப்பிள்ளை கருதுகிறார். அவரைப் போன்ற ஒருவரை இலங்கை அரசு வெகு சுலபமாகப் புறங்கூறி ஒதுக்கிவிட முடியாது. அதே நேரத்தில் இலங்கைக்கு உள்ளே விசாரணைகளை நடத்த அனான் விரும்பினால் அதனை மறுப்பதும் இலங்கை அரசுக்கு தர்மசங்கடமானது. மீறி தடை விதிக்கப்பட்டால் அது சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும்'' என்று ஐ.நா. வட்டாரங்கள் கூறுகின்றன.
அண்மையில் சிரியாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில்கூட அனான் தீவிர ஈடு பாடு காட்டி நேர்மையுடன் செயற்பட்டிருந்தார்
Comments[ 0 ]
கருத்துரையிடுக