ஷூட்டிங்கில் டைரக்டர் ஹரியின் பணி செய்யும் வேகத்தை கண்டு ஷாக் ஆனார் ஸ்ருதிஹாசன்.சூர்யாவுடன் ‘7ஆம் அறிவு, தனுஷுடன் ‘3 என இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஸ்ருதி ஹாசன், இந்தி, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
1 வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் தற்போது ‘பூஜை படத்தில் நடிக்கிறார். விஷால் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ஹரி டைரக்ஷன் செய்து வருகிறார். இதன் ஷூட்டிங் கோவையில் நடக்கிறது. ஷூட்டிங் பணிகள் கேப் இல்லாமல் படுவேகமாக நடப்பதை கண்ட ஸ்ருதி இயக்குனர் ஹரிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்,தனது இணைய தள பக்கத்தில் இதுபற்றி ஸ்ருதி கூறும்போது, ‘பூஜை படத்தின் ஷூட்டிங் கோயம்புத்தூரில் நன்றாக நடந்து வருகிறது. இயக்குனரின் மின்னல் வேகம் என்னை ஆச்சரியப்பட வைத்தது என குறிப்பிட்டிருக்கிறார். இப்படத்தில் பட்டதாரி பெண்ணாக வேடம் ஏற்றிருக்கிறார் ஸ்ருதி.
Comments[ 0 ]
கருத்துரையிடுக