இந்திய புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டால் இந்திய முன்னணி நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இலங்கை ஜனாதிபதி விடுத்த அழைப்பை ஏற்கனவே ரஜினிகாந்த் மறுத்திருந்த நிலையில் பதவியேற்பு விழாவையும் நிராகரிப்பார் என குறிப்பிடப்படுகின்றது.
எதிர்வரும் 26ஆம் திகதி மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மோடியின் பதவியேற்பு விழாவில் பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களான அமிதாபச்சன்- சல்மான்கான்- அனுபம் கெர் மற்றும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேர்தலின் போது நரேந்திர மோடி சந்தித்த நடிகர் விஜய்க்கு பதவியேற்பு விழாவிற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments[ 0 ]
கருத்துரையிடுக