ஜெயம் ரவி கொடுத்த பார்ட்டியில் சிம்புவும் நயன்தாராவும் நேருக்கு நேர் வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். சில தினங்கள் கழித்து த்ரிஷா கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்ட இருவரும் கட்டி பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்தனர்.
த்ரிஷாவின் பர்த்டே பார்ட்டியில் எடுக்கப்பட்ட காதல் ஜோடி ஒன்றாக இருத்த படத்தை திட்டமிட்டே ட்விட்டரில் வெளியிட்டாராம் த்ரிஷா. ஏன் இவருக்கு இந்த வேண்டாத வேலை? என்று கேட்டபோது ரெண்டு பேரும் மோதல் முடிந்து இணைந்து விட்டார்கள்? என்ற செய்தியை மக்களுக்கு தெரிவிக்கும் விதமாகதான் அந்த போட்டோ வெளிய விட்ட மேட்டராம். அப்படி என்னதான் நடந்தது அந்த பார்ட்டியில்? பல நாட்கள் கழித்து இப்போது தான் அந்த விஷயம் தலை தூக்கி லேசாக வெளியே கசிய ஆரம்பித்திருக்கிறது. அம்புட்டு பெரிய விஷயமா என்ன? அதலாம் ஒன்னுமில்லைங்க. ஒரு தனி அறைக்குள் த்ரிஷா, நயன்தாரா, சிம்பு மூவரும் அமர்ந்து கொண்டு எதிர்காலத்தை பற்றி விடிய விடிய பேசினார்களாம்.
இருவருக்குள்ளே இந்த சண்டையை முடிவு கொண்டு வரும் வகையில் சமாதான தூதுவராக செயல்பட்டவர் த்ரிஷாதானாம். இதற்கு முன் நயன்தாராவும் த்ரிஷாவும் எலியும் பூனையுமாக இருந்த காலம் மலை ஏறி போய் விட்டது போல…! என்னவென்றே தெரியவில்லை இவர் இந்தளவுக்கு மனம் மாறியிருப்பதுதான். இந்த காதல் லவ் போ்ட்ஸ் மீண்டும் இணைய வேண்டும் என்ற ஆசையில் செய்தாராம்.
சிம்புவின் காதல் அழிவதில்லை.....
Comments[ 0 ]
கருத்துரையிடுக