கமல்ஹாசன் நடித்து கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த’அன்பே சிவம்’ படத்தால் தனக்கு மனதளவிலும், பொருள் அளவிலும் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது என்று சமீபத்தில் பேட்டியளித்த சுந்தர் சி கூறியுள்ளார்.
அன்பே சிவம் படத்தை தயாரித்த லட்சுமி மூவி மேக்கர்ஸ் தனக்கு சம்பளமாக ஒரு பைசாகூட தரவில்லை என்றும், படம் சரியாக ஓடாததால் தனது சொத்தை விற்றுதான் வருமானவரி கட்டியதாகவும் அதனால் தனக்கு சம்பளம் தரமுடியாது என்று தயாரிப்பாளர் தன்னிடம் கூறினார் என்றும் சுந்தர் சி கூறியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தை சுந்தர் சி இயக்கவே இல்லை. அவர் பெயரளவுக்குத்தான் இயக்குனர். இந்த படத்தை முழுக்க முழுக்க இயக்கியது கமல்தான் என்ற பேச்சும் பரவி வந்ததால் தனக்கு மனக்கஷ்டமும், சம்பளம் வராததால் தனக்கு பொருள் கஷ்டமும் ஏற்பட்டதாக சுந்தர் சி, கூறியுள்ளார்.
அன்பே சிவம் தோல்விக்கு பின் எந்த காரணத்தை கொண்டும் சீரியஸ் படமே எடுக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்ததாகவும், இனியொரு முறை அம்மாதிரியான ரிஸ்க்கை எடுக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். தற்போது கமல்ஹாசன் தானே படங்களை இயக்குவதுபோல், அப்போதே அன்பே சிவம் படத்தையும் இயக்கியிருந்தால் தனக்கு மனக்கஷ்டமும், பொருள் கஷ்டமும் வந்திருப்பதை தவிர்த்திருக்கலாம் என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
Comments[ 0 ]
கருத்துரையிடுக