இராணுவத்தின் தொண்டர் படையணிக்கு யாழ்ப்பாணத்து இளைஞர் யுவதிகளை இணைப்பதற்குரிய மாபெரும் வேலைத் திட்டத்தை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளனர்.
இராணுவத் தொண்டர் படைக்கு ஆள்களைத் திரட்டித் தருமாறு ஒவ்வொரு பிரதேச செயலாளர்களையும் கோரியுள்ள இராணுவத்தினர் கிராம சேவையாளர்கள் ஊடாகக் கிராமம் கிராமமாக இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
இராணுவத்தினரின் தொண்டர் படையணிக்கு ஆள்களை இணைத்துக் கொடுப்பது தொடர்பிலான கலந்துரையாடலைஇ யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் இரhணுவத்தினருக்கு நேற்று ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார். யாழ்.மாவட்டச் செயலகத்தில் இரு மணி நேரம் இடம்பெற்ற கலந்துரையாடலில்இ மேஜர் ஜெனரல் ரட்ணசிங்கம் கலந்து கொண்டு பிரதேச செயலாளர் களுக்கு இது குறித்து விளக்கமளித்தார்.
இராணுவத்தின் தொண்டர் படையணிக்கு இணைவதால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் பிரதேச செயலாளர்களுக்கு அவர் எடுத்துரைத்தார்.ஒரு சில பிரதேச செயலாளர்கள் இவ்வாறான நடவடிக்கையைத் தம்மால் முன்னெடுக்க முடியாதென்று சுட்டிக்காட்டியபோதும் அரச அதிபர் அதனை முன்னெடுக்கலாம் என்று தெரிவித்ததுடன் கிராம சேவையாளர்கள் ஊடாக இலகுவாக முன்னெடுக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை காலை 10 மணிக்கு ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் செல்லும் இராணுவத்தினர் தொண்டர் படையணிக்கு ஆள்களைத் திரட்டித் தருமாறு கிராம சேவையாளர்களைக் கோரவுள்ளனர். அத்துடன் ஆள்களைத் திரட்டுவதற்காக இது தொடர்பான துண்டுப் பிரசுரமும் இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் செய்தி சேகரிப்பதற்கு இராணுவத்தினர் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (யாழ்)
Comments[ 0 ]
கருத்துரையிடுக